அவுஸ்ரேலியாவிற்கு எதிரான 9 ஒருநாள் தொடர்களை கைப்பற்றி தென் ஆபிரிக்கா சாதனை!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 276 ஓட்டங்க் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த தொன்னாபிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரினை கைப்பற்றியுள்ளது.

அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்கா அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் அவுஸ்ரேலிய அணியை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை கைப்பற்றியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது.
அவுஸ்ரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஸ் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.
டிராவிஸ் ஹெட் 103 பந்துகளில் 142 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபக்கத்தில் பொறுப்புடன் ஆடிய மார்ஸ் சதமடித்ததுடன் ஆட்டமிழந்தார். கிரீன் 118 ஓட்டங்களுடனும் அலெக்ஸ் கேரி 50 ஓட்டங்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அவுஸ்ரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்கள் மாத்திரம் இழந்து 421 ஓட்டங்களை குவித்திருந்தது.

இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களுக்குள், சகல விக்கிட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் 276 ஓட்டங்கள் வித்தியசாத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. அவுஸ்ரேலிய அணி தரப்பில் கூப்பர் கானோலி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

இதேவேளை முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த தொன்னாபிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரினை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக முறை ஒருநாள் தொடரை வென்ற அணி என்ற புதிய சாதனையை தென் ஆப்பிரிக்கா படைத்தது. அவுஸ்ரேலியாவிற்கு எதிரான 9 ஒருநாள் தொடர்களை தென் ஆபிரிக்க கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

நன்றி

Leave a Reply