ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 5 பாகிஸ்தான் ‍ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா மீண்டும் தெரிவிப்பு!

கடந்த மே மாதம் நடந்த ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​ஐந்து பாகிஸ்தான் ஜெட் விமானங்களை தமது விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படை இன்று (03) மீண்டும் வலியுறுத்தியது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஐ.நா.வில் தனது கருத்துகளின் போது இந்தியாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பான திரிபுபடுத்தப்பட்ட உண்மைகளை முன்வைத்த சில நாட்களுக்குப் பின்னர் இந்திய விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் இந்தக் கூற்றை மீண்டும் கூறினார்.

இந்திய விமானப் படையின் 93 ஆவது தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர், F-16 மற்றும் JF-17 ரகத்தைச் சேர்ந்த ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களை ஆப்ரேஷன் சந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தார்.

அத்துடன், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பொதுமக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மற்றும் தளங்களை குறிவைத்து செயலிழக்கச் செய்ததில் இந்திய இராணுவத்தின் சக்தி மற்றும் துல்லியத்தை உலகம் கண்டதாகவும் இந்திய விமானப்படைத் தலைவர் கூறினார்.

இந்திய விமானங்களை வீழ்த்தியதாக தவறான கூற்றுக்களை வெளியிட்டதற்காக பாகிஸ்தானையும் அவர் கேலி செய்தார்.

நன்றி

Leave a Reply