22
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் உள்ள கடல்நீரேரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர், எதிர்பாராத விதமாக சேற்றில் புதையுண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த கமலநாதன் சாரூஜன் (வயது 25) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இன்று திங்கட்கிழமை கடல்நீரேரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர் திடீரென சேற்றில் சிக்கி காணாமல் போயுள்ளார்.
இதனை அவதானித்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார்.
காவற்துறை விசாரணை: இச்சம்பவம் குறித்து அச்சுவேலி காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
