இங்கிலாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட ஈரான் நாட்டு நபர்!

இங்கிலாந்திலிருந்து கடந்த மாதம் நாடுகடத்தப்பட்ட ஈரான் நாட்டு நபர் ஒருவர், மீண்டும் சிறிய படகில் கடல் வழியாக நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் முன்பு இங்கிலாந்து–பிரான்ஸ் குடியேற்ற ஒப்பந்தத்தின் கீழ் பிரான்ஸுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.

ஆனால், சில நாட்களுக்கு முன் மீண்டும் இங்கிலாந்துக்குள் நுழைந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் .

இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் கூறியதாவது – “அந்த நபர் விரைவில் மீண்டும் பிரான்ஸுக்கு அனுப்பப்படுவார். அவரை அடையாளம் காண எங்களுடைய கண்காணிப்பு முறை சரியாகவே செயல்பட்டது. அவரின் உயிரியல் அடையாளங்கள் (biometrics) மூலம் அவர் மீண்டும் நாட்டுக்குள் நுழைந்ததை கண்டறிந்தோம்,அவர் தனது பணத்தையும் நேரத்தையும் வீணாக்குகிறார். மீண்டும் வந்தாலும், மீண்டும் நாடுகடத்தப்படுவார். இது எதிர்காலத்தில் இதுபோன்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.

 

நன்றி

Leave a Reply