இங்கிலாந்தில் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி 17 வயது நண்பரின் மரணத்திற்கு காரணமாக அமைந்த இளைஞருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு (Corey Cooper) கோரி கூப்பர் என்ற இளைஞன் ஓட்டிச் சென்ற கார் (Sheffield) ஷெஃபீல்டில் உள்ள ஒரு தடுப்புச் சுவரில் மோதியதில் ஜோஷ் (Josh ) என்ற அவரது நண்பர் உயிரிழந்தார்.
அதன்படி, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி 17 வயது சிறுவனின் மரணத்திற்கு காரணமாக அமைந்தமைக்காக குறித்த இளைஞருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்தின்போது 17 வயதாக இருந்த கூப்பர், 20 மைல் வேகத்தில் வேகமாகச் சென்ற நிலையில் காரின் தடைகளில் ஏற்பட்ட கோளாறு குறித்த எச்சரிக்கை விளக்கைக் கவனிக்கத் தவறியமையே விபத்துக்கான காரணமா என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தற்போது 19 வயதாகும் கூப்பர், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாகவும், இரண்டாவது பயணியான (Gabe Wiggett) கேப் விகெட்டை ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி கடுமையாக காயப்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு 5 ஆண்டுகள் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
