41
தைப்பூச தினத்தினை முன்னிட்டு , இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் பால் குட பவனி இடம்பெற்று ஆறுமுக பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.
தைப்பூச தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு அபிஷேகங்கள் இடம்பெற்று விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி, தொடர்ந்து காலை மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி வந்து முருக பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.
அதேவேளை இன்றைய தினம் மாலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று உலக பெரு மஞ்சத்தில் ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளிக்கவுள்ளார்.
