இதுவரை 14 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான கஞ்சா மீட்பு! – Athavan News

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, 1,482.82 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள், அதனுடன் தொடர்புடைய 59,243 சந்தேகநபர்கள், 14,434.468 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள், அதனுடன் தொடர்புடைய 59,482 சந்தேகநபர்கள், 32.642 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள், அதனுடன் தொடர்புடைய 86 சந்தேகநபர்கள், 582.136 கிலோகிராம் ஹசீஸ் போதைப்பொருள், அதனுடன் தொடர்புடைய, 1,444 சந்தேகநபர்கள், 2,542.454 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய, 67,762 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலும் , 3,961,790 போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய, 2,921 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply