இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கும் அஞ்சல் சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை 30 ஆம் திகதி அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட கடுமையான வரி விதிப்பைத் தொடர்ந்து எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

இதேவேளை, 800 அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களுக்கு இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இனி அது இரத்து செய்யப்படவுள்ளதாகவும் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களுக்கும் அவற்றின் மதிப்பைப் பொருட்படுத்தாமல் சர்வதேச அவசர பொருளாதார ஆற்றல் சட்டத்தின்படி வரி வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நன்றி

Leave a Reply