இந்தியாவை இடைவிடாது தாக்கும் மழை; தொடரும் மண்சரிவுகள்!

இந்த ஆண்டு பருவமழை ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பெரும்பகுதிகளை கடுமையாகப் பாதித்து, பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் அங்கு ஏற்கனவே பல உயிர்களை காவு வாங்கியுள்ளன, குடியிருப்புகளையும் சீர்குலைத்துள்ளன.

மேலும் இந்த மாநிலங்களில் புதிய கனமழை பெய்து வருவதால் சேதம் தொடர்கிறது.

இந்தியத் தேசியத் தலைநகர் டெல்லியில், ஆகஸ்ட் மாதத்திலும் இந்த மாத தொடக்கத்திலும் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

குருகிராம் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியது,

வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி மிதப்பதைக் காட்டும் வைரல் வீடியோக்கள் வெளியாகின.

செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதி இடுப்பளவு நீரில் மூழ்கியிருந்ததால், வீதிகள் மூடப்பட்டு போக்குவரத்து தடைபட்டது.

நெருக்கடியை மேலும் அதிகரிக்க, கடுமையான மழை காரணமாக யமுனை நதி பல சந்தர்ப்பங்களில் அபாய அளவைத் தாண்டியது.

இதனால் நகரம் முழுவதும் வெள்ளம் ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது.

மும்பையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடுமையான நீர் தேங்கியுள்ளது.

கடந்த மாதம், வெள்ளம் காரணமாக மோனோ ரயில் பழுதடைந்தது, அதே நேரத்தில் சுரங்கப்பாதைகள் மற்றும் முக்கிய வீதிகள் நீரில் மூழ்கி பயணிகள் தவித்தனர்.

ஹைதராபாத்திலும் வார இறுதி முழுவதும் பலத்த மற்றும் கடுமையான மழை பெய்தது – வீதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கின, மேலும் மழையின் போது தனித்தனி சம்பவங்களில் இரண்டு பேர் காணாமல் போயினர்.

செவ்வாயன்று, பல மாநிலங்கள் இரவு முழுவதும் பெய்த மழையால் மீண்டும் புதிய அழிவுகள் பதிவாகின.

இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் கனமழை பெய்ததால், பல மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டது.

மண்டியில், திங்கள்கிழமை இரவு 11 மணிக்குத் தொடங்கிய மழை அதிகாலை 1 மணிக்கு தீவிரமடைந்ததால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர்.

நிரம்பி வழிந்த சௌலி காட் நதி, தரம்பூர் பேருந்து நிலையத்தை வெள்ளத்தில் மூழ்கடித்து.

வெள்ளம் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள், வாகனங்களை அடித்துச் சென்றது.

மேலும் பல வீடுகளையும் மூழ்கடித்தது.

தரம்பூர் அதிகாரிகள் கூற்றுப்படி, இரவு முழுவதும் வெளியேற்றும் பணி தொடர்ந்தது ஆனால் எந்தவித உயிரிழப்பும் பதிவாகவில்லை எனக் கூறியது.

சிம்லாவின் பிற இடங்களில், ஹிம்லாந்தில் ஏற்பட்ட ஒரு பெரிய மண்சரிவினால் பல வாகனங்கள் சிக்கிக் கொண்டன.

ஒரு முக்கிய வதியூடான போக்குவரத்து தடைப்பட்டது. தடைபட்டது.

திடீர் வெள்ள அபாயம் காரணமாக, அனைத்து தேசிய விளையாட்டுப் போட்டிகளும் செப்டம்பர் 30 வரை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டன.

மண்டி மாவட்டத்தின் நிஹ்ரி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply