இந்தோனேஷியாவில் பாடசாலையில் வழங்கபட்ட மதியபோசன உணவினை உட்கொண்ட 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவானது நஞ்சடைந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது எனவும் உணவினை உட்கொண்ட மாணவர்கள் வயிற்று வலி, தலைசுற்றல், வாந்தி, சுவாசக்குறைபாடு போன்ற அறிகுறிகளை எதிர் நோக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தவாரத்தின் இது வரையான காலப்பகுதியில் மாத்திரம் 1,171 மாணவர்கள் உணவு நஞ்சடைந்தமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷிய அரசினால் முன்னெடுக்கப்பட்ட இலவச மதிய போசன உணவுத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட உணவே இவ்வாறு நஞ்சடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.