இன்று நாட்டில் கன மழை – LNW Tamil

நாட்டில் இன்று (04) மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, பலத்த மழை, பலத்த காற்று மற்றும் பலத்த மின்னல் தாக்கங்கள் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி

Leave a Reply