இயற்கைப் பேரிடாின் போது அரசு மீது வழக்குத் தொடுப்பது தவறு

சமீபத்திய இயற்கை அனர்த்தங்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் இராணுவத் தளபதியும், பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா     பதிலளித்துள்ளார். இலங்கையின் வளப் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி அவர் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியத்துவம்  வகித்துள்ளன.

இயற்கைப் பேரிடாின் போது  அரசு மீது வழக்குத் தொடுப்பதை கடுமையாகச் சாடியுள்ள பொன்சேகா  பேரழிவைத் தடுக்கத் தவறியதால் அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்வதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது பயனற்றது எனவும்அது  எதிா்க்கட்சிகளின்  குறுகிய அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

 கடந்த காலங்களிலும்  வெள்ளம் ஏற்பட்டுள்ளது. யார் ஆட்சியில் இருந்திருந்தாலும் இறுதி விளைவு ஒன்றுதான். இம்முறை மழை அதிகம், அதனால் விளைவுகளும் அதிகம். முந்தைய ஆட்சியாளர்கள் இருந்திருந்தால் கூட நிலைமை அப்படியேதான் காணப்பட்டிருக்கும் என  அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.

வளங்கள், உபகரணங்கள் மற்றும் மனிதவளத்தில் உள்ள பற்றாக்குறையே செயல்பாட்டில் உள்ள சவாலுக்குக் காரணம் என  திட்டவட்டமாகக் கூறிய அவர்   இலங்கையில் வளங்கள், உபகரணங்கள் மற்றும் மனிதவளம் குறைவாக இருப்பதால் யாராலும் அற்புதங்களைச் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

 கொழும்பில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் க ப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் இந்தக்   கருத்துக்களைத் தெரிவித்துள்ளாா்.

 

The post இயற்கைப் பேரிடாின் போது அரசு மீது வழக்குத் தொடுப்பது தவறு appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply