இரண்டு புதிய மாதுளை வகைகள் வெற்றிகரமாக சோதனை! – Athavan News

விவசாயத் திணைக்களத்தின் மேற்பார்வையில் சோதனை செய்யப்பட்ட இரண்டு புதிய மாதுளை வகைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. ‘மலி பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ எனப் பெயரிடப்பட்ட இவ்வகைகள், அம்பலாந்தோட்டை ருஹுணு தாவர நர்சரியில் சோதிக்கப்பட்டன.

உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி) எல்.ஜி.ஐ. சமன்மாலி தலைமையில், விவசாய அமைச்சு மற்றும் தேசிய விவசாயக் கொள்கை சபையின் விதிகளின்படி மேற்கொள்ளப்பட்ட இச் சோதனையில், ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வகைகளை பயிரிட முடியும் என்பது தெரியவந்துள்ளது.

இந்த புதிய மாதுளை வகைகளை உள்நாட்டில் பயிரிடுவதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து மாதுளை இறக்குமதி செய்வதை குறைக்க முடியும். மேலும், இவற்றை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நியச் செலாவணியும் ஈட்டலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply