அனுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக் மகேந்திர அதிகாரி(Janak Mahendra Adikari) மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பிரதி அமைச்சர் எஸ்.சி.முத்துக்குமாரண (S.C. Muthukumarana) ஆகியோர் காலமாகியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கெக்கிராவ தொகுதி அமைப்பாளராக பணியாற்றிய ஜனக் மகேந்திரா, உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனுராதபுரம் மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பிரதி அமைச்சருமான முத்துக்குமாரண, சிறிது காலமாக சுகவீனமுற்றிருந்த நிலையில் நேற்று(17) மாலை காலமாகியுள்ளார்.
