இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா இன்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவருடன் இணைந்து, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மற்ற உத்தியோகபூர்வ அதிகாரிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தங்களது பதவிகளை விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான தீர்மானம் தொடர்பான தகவல்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#ShammiSilva #SriLankaSports #CricketAdministration #Resignation
The post இலங்கை கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: ஷம்மி சில்வா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிவிலகல் appeared first on Global Tamil News.
