தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடருக்கான குழாமை பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி, முன்னாள் தலைவர் பாபர் அசாம் மற்றும் நட்சத்திர பந்து வீச்சாளர் நசீம் ஷா ஆகியோர் டி20 அணிக்குத் திரும்பும் முக்கிய வீரர்களாவர்.
அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ள மூன்று வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப்பும் ஒருவர்.
எதிர்வரும் ஒக்டோபர் 28 முதல் பாகிஸ்தான் தென்னாப்பிரிக்காவுடன் ஆறு வெள்ளை பந்து போட்டிகளில் (மூன்று டி:20, மூன்று ஒருநாள்) விளையாடும்.
அதற்குப் பின்னர் நவம்பர் 11 முதல் இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும்.
பின்னர் ராவல்பிண்டி மற்றும் லாகூரில் பாகிஸ்தான், சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 முத்தரப்பு தொடர் நடைபெறும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சல்மான் அலி ஆகா பாகிஸ்தான் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த டி20 தொடர்களையும் அவர் வழிநடத்தவுள்ளார்.
பாபரும் நசீமும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அண்மைய டி20 போட்டிகள் மற்றும் இந்த ஆண்டு ஆசியக் கிண்ணத்தில் விளையாடவில்லை.
ஆனால், 2026 டி20 உலகக் கிண்ணம் தொடங்குவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் அவர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர்.
ஒருநாள் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள மூன்று வீரர்களில் ரவுஃப் ஒருவராக உள்ளார்.
அவர்களுடன் பைசல் அக்ரம் மற்றும் ஹசீபுல்லாவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகள் புதிய ஒருநாள் தலைவர் ஷாஹீன் அப்ரிடியின் கீழ் பாகிஸ்தானுக்கு முதல் போட்டியாகும்.
பாகிஸ்தான் டி20 அணி;
சல்மான் அலி ஆகா (தலைவர்), அப்துல் சமட், அப்ரார் அகமட், பாபர் அசாம், ஃபஹீம் அஷ்ரஃப், ஹசன் நவாஸ், மொஹமட் நவாஸ், மெஹமட் வசிம், மொஹமட் சல்மான் மிர்சா, நஷீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஷஹீன் ஷா அப்ரிடி, உஸ்மான் கான் மற்றும் உஸ்மான் தாரிக்
மேலதிக வீரர்கள்
ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவூஃப், சுபியான் மொகிம்

பாகிஸ்தான் ஒருநாள் அணி;
ஷஹீன் ஷா அப்ரிடி (தலைவர்), அப்ரார் அகமட், பாபர் அசாம், ஃபஹீம் அஷ்ரஃப்,
ஃபைசல் அக்ரம், ஃபக்கர் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா, ஹசன் நவாஸ்,ஹுசைன் தலாத், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் வசிம், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா




