இலங்கை முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள்!

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான வழக்குகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவலை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) வெளியிட்டுள்ளது.

இதுவரை நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4,289 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 1,683 வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. சட்ட நடவடிக்கை: 1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 சிறுவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பின்வரும் பாரதூரமான குற்றங்கள் தொடர்பிலேயே நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன: மற்றும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகங்கள். சிறுவர்களை கொடுமைக்கு உட்படுத்தல். சிறுவர் தொடர்பான ஆபாச வெளியீடுகள். பாலியல் தொழிலுக்காகச் சிறுவர்களை வாடகைக்குப் பெறுதல் அல்லது பணியில் அமர்த்தல் உள்ளிட்ட பிரதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிறுவர்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்கள் சமூகத்தின் எதிர்காலத்தையே சிதைக்கின்றன. துஷ்பிரயோகங்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களுக்கு: 📞 தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அவசர அழைப்பு இலக்கம்: 1929

நன்றி

Leave a Reply