இலங்கை வைத்தியசாலை ஒன்றில் முதன்முறையாக – Jaffna Muslim

இலங்கையில் வைத்தியசாலை ஒன்றில் முதன்முறையாக  ‘ஸ்மார்ட் டோக்கன்’ முறைமை நடைமுறைக்கு வந்துள்ளளது. காலி – கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவில் (OPD) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மருந்து பெற்றுக்கொள்வதற்காக நோயாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எதிர்நோக்கும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த முறைமை நடைமுறைக்கு வந்துள்ளது.

புதிய டிஜிட்டல் முறையின் கீழ், நோயாளர்கள் தங்களது மருந்துச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, மருந்து விநியோகிக்கும் இடத்தில் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் அவர்களுக்கு டோக்கன் ஒன்று வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து குறித்த இலக்கம் அழைக்கப்படும் போது மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நன்றி

Leave a Reply