இலங்கையிலும் Work from Home நடைமுறைக்கு வருமா


தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் உலகின் ஏனைய நாடுகள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு (Work from Home) முற்பட்டாலும், தற்போதைக்கு இலங்கைக்குள் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். 

எரிசக்தியைப் பாதுகாத்துக்கொண்டு மக்கள் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.  தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக உலகச் சந்தையில் விலை அதிகரிப்பால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பை நுகர்வோர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அமெரிக்க ஜனாதிபதி உட்பட மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஏற்ப எரிபொருள் விலை மாறும் என்றும் அமைச்சர்  தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply