இலங்கையை 59 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய மகளிர் அணி!

கவுகாத்தியில் நேற்று (செப்.30) நடந்த 2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி டக்வெத் லூயிஸ் முறையில் இலங்கையை 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

அறிமுக வீராங்கனை அமன்ஜோத் கவுருடன் இணைந்து அரை சதம் அடித்ததுடன், பந்து வீச்சில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்திய தீப்தி சர்மாவின் அனுபவம் இந்த ஆட்டத்தில் வெற்றியை பெற்றுக் கொள்ள இந்திய அணிக்கு உதவியது.

குவஹாத்தி பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (30) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்த இரு அணிகளுக்கும் இடையிலான 2025 உலகக் கிண்ணத்தின் முதல் ஆட்டமானது மழை குறுக்கிட்டதனால் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போட்டி சுமார் 90 நிமிடங்கள் கழித்து ஆரம்பமானது.

இதனால், ஓவர்கள் 47 ஆக குறைக்கப்பட்டன.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 269 ஓட்டங்களை பெற்றனர்.

இந்திய அணி சார்பில் அமன்ஜோத் கவுர் 57 (56) ஓட்டங்களையும், தீப்தி சர்மா 53 (53) ஓட்டங்களையும், ஹர்லீன் தியோல் 48 (64) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் இனோகா ரணவீர 4 விக்கெட்டுகளையும், உதேஷிகா பிரபோதானி 2 விக்கெட்டுகளையும் அதிகபடியாக வீழ்த்தினர்.

பின்னர், பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபடியாக அணித் தலைவி சாமரி அத்தபத்து 43 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.

இந்தியா சார்பில் பந்து வீச்சில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், சினே ராணா மற்றும் ஸ்ரீ சரணி

ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அதிகபடியாக எடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகியாக தீப்தி சர்மா தெரிவானார்.

Image

நன்றி

Leave a Reply