இஷாரா செவ்வந்தியின் சகோதரனை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி


கணேமுல்ல சஞ்ஜீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தியின் சகோதரனை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். 

இஷாரா செவ்வந்தி, இன்று (18) மேலதிக விசாரணைகளுக்காக மீண்டும் மித்தெனிய பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

கைது செய்யப்பட்ட செவ்வந்தி உள்ளிட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கஜ்ஜா என்ற அருண விதானகமகே என்பவரின் கொலை தொடர்பாகவும் பல தகவல்கள் வெளியாகி உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 18ஆம் திகதி கஜ்ஜா என்ற அருண விதானகமகேவை கொலை செய்வதற்காகவே கெஹெல்பத்ர பத்மே, செவ்வந்தியையும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் மித்தெனியவுக்கு அனுப்பியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

எனினும், திடீரென மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்படி, சஞ்ஜீவவின் கொலைக்காக அவர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும், வேறு ஒரு தரப்பைக் கொண்டு பெப்ரவரி 18ஆம் திகதி கஜ்ஜா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். (Hiru)

நன்றி

Leave a Reply