இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் ! – Athavan News

காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு  வலியுறுத்தி வருகின்றன.

குறிப்பாக காசாவின் முக்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும் ஐக்கிய இராச்சியம்,பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள், இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.

நிலைமை சீராகாவிட்டால் ‘தக்க  நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்த நாடுகள் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது.

அதேசமயம்  அமெரிக்கா, இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடாக இருந்தாலும், காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றார்.

காசா போர் 21 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த மோதலில் 57,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும்,1,700க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல உலக நாடுகள், இந்த மனிதாபிமான பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. காசாவில் ஒரு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால், பிராந்தியத்தில் அமைதி திரும்புவது கடினம் என்பதே சர்வதேச சமூகத்தின் பொதுவான கருத்தாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply