ஈரானில் ரகசியமாக தரையிறங்கிய சீன விமானங்கள் – ஆயுத உதவி சந்தேகம், அமெரிக்கா பதற்றம் – Sri Lanka Tamil News


மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இரு தரப்பினரும் ராணுவம் குவித்துள்ளதால் நிலைமை பதற்றமாகவே உள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இரு தரப்பினரும் ராணுவம் குவித்துள்ளதால் நிலைமை பதற்றமாகவே உள்ளது.

இந்த சூழலில், சீனாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் நான்கு சரக்கு விமானங்கள் ரகசியமாக ஈரானில் தரையிறங்கியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானங்கள் தரையிறங்கும் முன் தங்களது ‘டிரான்ஸ்பாண்டர்’ (விமானத்தின் இருப்பிடத்தை கண்காணிக்கும் கருவி) அணைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

சாதாரணமாக எந்த விமானமும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கருவியை செயல்பாட்டில் வைத்திருக்கும். ஆனால் ஒரே நேரத்தில் பல விமானங்கள் இதை அணைத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த விமானங்கள் ஏதோ ரகசிய சரக்குகளை — குறிப்பாக ஆயுதங்களை — கொண்டு வந்திருக்கலாம் என்ற கூற்றுகள் வல்லுநர்கள் மத்தியில் பேசப்படுகின்றன.

மேலும், ஈரான் மற்றும் சீனா இடையேயான நெருக்கமான உறவு காரணமாக இந்த சந்தேகம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இதுகுறித்து இரு நாடுகளும் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கவில்லை.

முன்னதாக, டிரெம்ப், சீனா ஈரானுக்கு உதவி செய்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். அதேவேளை, சீன தரப்பு இதனை மறுத்து, ஈரானுக்கு ஆயுத உதவி வழங்கமாட்டோம் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ரகசியமாக விமானங்கள் தரையிறங்கியதாக வெளியாகியுள்ள தகவல்கள், அமெரிக்காவை மேலும் பதற்றமடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply