ஈரான் மீதான தாக்குதல் உலக முஸ்லிம்கள் மற்றும் இலங்கை சமூகமும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளதாக ஈரானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் NM சஹீட் தெரிவித்துள்ளார்.
விழுதுகள் நிகழ்ச்சியில் தொகுப்பாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஆன்மீகத் தலைவர் மீதான தாக்குதலானது, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களை ஒன்றிணைத்துள்ளது. பொதுவாக கொள்கை ரீதியாக வேறுபட்டிருக்கும் முஸ்லிம்கள், இந்த விவகாரத்தில் ஈரானுக்கு பின்னால் அணிதிரண்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் ஷியா முஸ்லிம்களாக இல்லாத போதிலும், ஈரானின் தற்போதைய நிலையை ஆதரிப்பதில் அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஈரானுக்கான ஆதரவு என்பது முஸ்லிம் சமூகத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் இஸ்லாம் அல்லாத பல சிங்கள அமைப்புகளும், “சரியாகச் சிந்திக்கும் மக்களும்” (Right-thinking people) கலந்துகொண்டனர். இது ஒரு மதப் பிரச்சினையாகப் பார்க்கப்படாமல், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டமாகவே இலங்கையர்களால் பார்க்கப்படுகிறது.
முன்னரைப் போல செய்திகளை மறைக்க முடியாது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா எத்தகைய தடைகளை விதித்தாலும், சாமானிய மக்கள் தங்கள் கைபேசிகள் மூலம் உண்மைகளை உலகிற்கு உடனுக்குடன் கடத்தி வருகின்றனர்.ஈரான் தற்போது மிகவும் சாதூரியமாகவும், இராணுவ ரீதியாகப் பலமாகவும் இந்த நெருக்கடியைக் கையாண்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

