ஈரான் கப்பல்களில் இருந்தவர்களுக்கு, உதவிகளை வழங்க இலங்கை முன்வந்தமை பாராட்டுக்குரியது

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் விபத்துக்குள்ளான இரண்டு ஈரான் கப்பல்களில் இருந்தவர்களுக்கு, சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைய மனிதாபிமான உதவிகளை வழங்க இலங்கை அரசு முன்வந்தமை பாராட்டுக்குரியது என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் நாரம்பனாவே ஆனந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

உலக வல்லரசு நாடுகள் போரில் ஈடுபட்டுள்ள இக்கட்டான காலப்பகுதியில், இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பது கடினமானது என்ற போதிலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிகவும் புத்திசாலித்தனமாக சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் இலங்கை மறைமுகமாக அதன் ஒரு பங்காளியாக வேண்டிய நிலை குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply