“ஈரான் தொடர்பு” குறித்து பிரித்தானிய அரசு தீவிர விசாரணை! – Athavan News

பிரித்தானியாவின் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களை அந்நாட்டின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) வன்மையாகக் கண்டித்துள்ளார்.

பிரித்தானியாவின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் சமீபகாலமாக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் விளக்கமளித்துள்ளார்.

அரசியல் ஊடகவியலாளர் சோஃபி ரிட்ஜிடம் பேசிய உள்துறைச் செயலாளர், குறித்த நபர் சோமாலியாவில் பிறந்த எனவும் , 1990-களில் சிறுவனாகப் பிரித்தானியாவிற்கு வந்து தற்போது பிரித்தானியப் பிரஜையாக உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தத் தாக்குதல்களில் சிலவற்றுக்கு ஈரானிய ஆட்சி முறையுடன் (Iranian regime) தொடர்புடையதாகக் கூறிக்கொள்ளும் சில குழுக்கள் பொறுப்பேற்றுள்ளன.

அந்தத் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்தும் புலனாய்வு அமைப்புகள் ஆராய்ந்து வருவதாக உள்துறைச் செயலாளர் தெரிவித்தார்.

கோல்டர்ஸ் கிரீன் தாக்குதலில் ஈடுபட்ட நபர் தனித்துச் செயல்பட்டாரா அல்லது அவருக்குப் பின்னால் ஏதேனும் குழுக்கள் உள்ளனவா என்பது குறித்து தற்போதைக்குக் கருத்துத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

பொலிஸார் மிகத் தீவிரமாகத் தமது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யூத சமூகத்தினர் மீதான இந்தத் தொடர் வன்முறைச் சம்பவங்கள் பிரித்தானியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறைச் செயலாளர் உறுதியளித்துள்ளார்.

 

நன்றி

Leave a Reply