உடற்தகுதி குறித்து நம்பிக்கையுடன் பேட் கம்மின்ஸ்!  

காயத்திலிருந்து மீண்டு, பிரிஸ்பேனில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் விளையாட முடியும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி புதன்கிழமை (06) அறிவிக்கப்பட்டது.

பேட் கம்மின்ஸ் தனது நீண்டகால முதுகுவலியில் இருந்து தொடர்ந்து குணமடைந்து வருவதால் அவர் அந்த அணியில் இடம்பெறவில்லை.

எனினும், தனது பயிற்சி நடவடிக்கைகளை அதிகரிக்க தனது சக வீரர்களுடன் பெர்த்திற்கு பயணம் செய்வதாகவும், டிசம்பர் 4 ஆம் திகதி பிரிஸ்பேனில் தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் விளையாடுவதற்கு தான் தகுதி பெறுவேன் என்றும் கம்மின்ஸ் தெரிவித்தார்.

32 வயதான வேகப்பந்து வீச்சாளர் மூன்று மாதங்களுக்கு முன்பு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் கீழ் முதுகில் காயம் ஏற்பட்டதிலிருந்து விளையாடவில்லை.

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply