உடைந்து விழுந்த இராட்டினம்! சவுதி பூங்காவில் பயங்கரம்! (வீடியோ)

சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவொன்றில் கடந்த 31 ஆம் திகதி  இராட்டினமொன்று  திடீரென உடைந்து விழுந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல் ஹடா பகுதியில் உள்ள க்ரீன் மவுண்டன் பூங்காவில் நடந்த இந்த கோரமான சம்பவத்தில் குறைந்தது 23 பேர் படுகாயமடைந்தனர் எனவும் அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ தினத்தன்று 360 டிகிரிஸ்” என்று அழைக்கப்படும் அந்த இராட்டினத்தின் நடுவில் இருந்த கம்பம் திடீரென உடைந்து, இருக்கைகள் பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தன.

இந்த விபத்தின் போது இராட்டினத்தில் இருந்தவர்கள் அலறி துடித்ததாகவும், கீழே விழுந்தபோது அவர்களால் வெளியேற முடியவில்லை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இராட்டினத்தின் கம்பம் வேகமாகச் சுழன்று சில பார்வையாளர்களை தாக்கியதாகவும், இராட்டினத்தின் இருக்கைகள் தரையில் விழுந்ததால் பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு அவசர சிகிச்சை மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவினர் விரைந்து வந்தனர்.

காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் அவசர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://edition.cnn.com/2025/07/31/world/video/saudi-arabia-amusement-park-ride-breaks-vrtc

 

 

 

நன்றி

Leave a Reply