ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கைகொண்டு உதவி கரம் நீட்டியுள்ளன.
நெருக்கடியான நிலையில் சந்திரிக்கா 25 கோடி ரூபா நன்கொடை வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவரது செயற்பாடு ஏனையவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
மக்களுக்காக மக்களிடமிருந்து கிடைக்கும் ஒவ்வொரு ரூபாவையும் மக்களுக்காக பயன்படுத்துவோம்.
அரச அதிகாரிகள் நெருக்கடி நிலைமை விளங்கி அர்ப்பணிப்புடன் செயற்படுவது வரவேற்கத்தக்கது. எதிர்க்கட்சிகள் எங்கு குறைகள் உள்ளது என்பதை தேடிக்கொண்டு திரிகிறார்கள்.
– அமைச்சர் பிமல் ரத்நாயக்க –

