எகிப்தில் இன்று காசா உச்சி மாநாடு – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு: இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது | Israel-Gaza peace agreement will be signed today

டெல் அவிவ்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி தலை​மை​யில் எகிப்​தில் இன்று நடை​பெற உள்ள காசா அமைதி உச்சி மாநாட்​டில் 20-க்​கும் மேற்​பட்ட நாடு​களின் தலை​வர்​கள் பங்​கேற்​கின்​றனர். இதில் பங்​கேற்க வரு​மாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், பிரதமர் மோடி இந்த மாநாட்​டில் பங்​கேற்க மாட்​டார் என கூறப்​படு​கிறது. அதே​நேரம், இந்​தியா சார்​பில் மத்​திய வெளி​யுறவுத் துறை இணை அமைச்​சர் கீர்த்தி வர்​தன் சிங் பங்​கேற்​பார் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இஸ்​ரேலில் கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி நடை​பெற்ற ஓர் இசை நிகழ்ச்​சி​யில் ஹமாஸ் குழு​வினர் திடீரென புகுந்து தாக்​குதல் நடத்​தினர். இதில் 1,200 பேர் உயி​ரிழந்​தனர். 250 பேரை பிணைக் கைதி​களாக ஹமாஸ் குழு​வினர் பிடித்​துச் சென்​றனர். இதைத் தொடர்ந்​து, காசா மீது இஸ்​ரேல் ராணுவம் கடும் தாக்​குதல் நடத்​தி​யது. இந்த தாக்​குதல் 2 ஆண்​டு​களாக நீடித்​தது. இதில் பாலஸ்​தீன தரப்​பில் மொத்​தம் 67 ஆயிரம் பேர் உயி​ரிழந்​தனர்.

இந்த சூழ்​நிலை​யில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் முயற்​சி​யால் இரு தரப்​பினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. அதன் விளை​வாக, இரு தரப்​புக்​கும் இடையே கடந்த 9-ம் தேதி போர் நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்​டது. அதன்​படி, இஸ்​ரேல் ராணுவத்​தின் ஒரு பகுதி வாபஸ் பெறப்பட்டது.

அடுத்த கட்​ட​மாக, கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்பு சிறைபிடித்​துச் சென்ற இஸ்​ரேல் பிணைக் கைதி​களில் மீதம் உள்ள 20 பேரை ஹமாஸ் அமைப்​பினர் இன்றுவிடுவிக்க உள்​ளனர். இது​போல சுமார் 2 ஆயிரம் பாலஸ்​தீன கைதி​களை இஸ்​ரேல் விடுவிக்க உள்​ளது.

இந்​நிலை​யில், எகிப்​தின் ஷரம் எல் ஷேக் நகரில் காசா அமைதி உச்சி மாநாடு இன்று நடை​பெறுகிறது. இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அப்​தெல் பட்டா அல் சிசி ஆகிய இரு​வரும் தலைமை தாங்​கு​கின்​றனர். இதில், ஐ.நா. பொதுச் செயலர் அந்​தோனியோ குத்​தேரஸ், இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மர், இத்​தாலி பிரதமர் ஜார்​ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்​ரான் உட்பட 20-க்​கும் மேற்​பட்ட நாடு​களின் தலை​வர்​கள் பங்​கேற்​கின்​றனர்.

இதுதொடர்​பாக எகிப்து அதிபரின் செய்​தித் தொடர்​பாளர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: காசா பகு​தி​யில் போரை முடிவுக்கு கொண்​டுவர வேண்​டும் என்​பது​தான் காசா அமைதி உச்சி மாநாட்​டின் நோக்​கம். இதன்​மூலம் மத்​திய கிழக்கு நாடு​களில் அமைதி மற்​றும் நிலைத்​தன்​மையை நிறு​வுவதற்​கான முயற்​சிகளை வலுப்​படுத்​து​வது, பிராந்​திய பாது​காப்பு மற்​றும் நிலைத்​தன்​மைக்​கான புதிய அத்​தி​யா​யத்தை திறப்​பது ஆகிய​வை​யும் இந்த மாநாட்​டின் நோக்​கம் ஆகும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்த மாநாட்​டில் காசா அமைதி ஒப்​பந்​தம் முறைப்​படி கையெழுத்​தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. எனினும், இதில் இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு, ஹமாஸ் குழு​வினரின் பிர​தி​நிதி பங்​கேற்​பது இது​வரை உறுதி செய்​யப்​பட​வில்​லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று இஸ்​ரேல் சென்​று, நாடாளு​மன்​றத்​தில் உரை​யாற்ற உள்​ளார். அதன்​பின்​னர் எகிப்து சென்​று, காசா உச்சி மாநாட்​டுக்கு தலைமை தாங்க உள்​ளார்.

மத்​திய அமைச்​சர் பங்​கேற்பு: இந்​நிலை​யில், காசா அமைதி உச்சி மாநாட்​டில் பங்​கேற்க வரு​மாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி ஆகிய இரு​வரும் நேற்று கடைசி நேரத்​தில் அழைப்பு விடுத்​துள்​ளனர். ஆனால், பிரதமர் மோடி இந்த மாநாட்​டில் பங்​கேற்க மாட்​டார் என கூறப்​படு​கிறது. அதே​நேரம், இந்​தியா சார்​பில் மத்​திய வெளி​யுறவுத் துறை இணை அமைச்​சர் கீர்த்தி வர்​தன் சிங் பங்​கேற்​பார் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஹமாஸ் குழு​வினர் புறக்கணிப்பு: இதற்​கிடையே, காசா உச்சி மாநாட்டை புறக்​கணிக்​கப் போவ​தாக ஹமாஸ் குழு​வினர் தெரி​வித்​துள்​ளனர். குறிப்​பாக, ஆயுதங்​களைக் கைவிட வேண்​டும் என்ற ட்ரம்​பின் நிபந்​தனையை ஏற்க அவர்​கள் மறுத்து வரு​வ​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பாலஸ்தீனத்துக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பாலஸ்தீனர்களின் பிரதிநிதியாக விளங்கும் அதிபர் முகமது அப்பாஸை இந்த மாநாட்டில் பேச அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த சூழலில், பாலஸ்​தீன மக்​கள் ஆயிரக்​கணக்​கானோர் நடைபயண​மாக​வும், கார்​கள் மூல​மாக​வும் காசா கடற்​கரை வழி​யாக வடக்​கு பகு​தி​யில்​ சேதமடைந்​த நிலை​யில்​ உள்​ள தங்​கள்​ வீடு​களை நோக்​கி சென்​ற வண்​ணம்​ உள்​ளனர்​.

நன்றி

Leave a Reply