எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கலக்கமடைந்து துள்ளுகின்றார்கள் – அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

போதைப்பொருள் வர்த்தகர்கள், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் சமூக விரோத குற்றவாளிகளுக்கு புதிய சிறைச்சாலைகளை உருவாக்குவோம்.  கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கும் போது எதிர்க்கட்சிகளின் சில உறுப்பினர்கள் கலக்கமடைந்து துள்ளுகின்றார்கள். 

நாடு சுதந்திரமடைந்ததற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களில்  மற்றும் பாதாள  குழு செயற்பாடுகளை கண்டுகொள்ளவில்லை.  எமது அரசாங்கத்தில் எவரும் பாதாளக்குழுவினருடனோ, போதைப்பொருள் வர்த்தகர்களுடனோ தொடர்பு கொண்டிருக்கவில்லை. 

பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் கடந்த காலங்களில் கைது செய்யப்படும் போது  முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவ்வாறான நிலை தற்போது கிடையாது. முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதால் தான் எதிர்க்கட்சியினர் இன்று கலக்கமடைந்துள்ளார்கள்

பாராளுமன்றத்தில் இன்று (23)   உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார  இவ்வாறு தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply