எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் தானே களமிறங்கவுள்ளதாக சஜித் வலியுறுத்தல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் தானே களமிறங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். சஜித்  மற்றும் SJB  சிறுபான்மை பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடலின் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு வலியுத்தியுள்ளார்.

இதன்போது SJB  தலைமையிலான கூட்டணியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது. மீண்டுமொரு தேர்தலை எதிர்கொள்ளும் முன் பரந்துபட்ட எதிர்க்கட்சி கூட்டணியொன்றை அமைக்க வேண்டும் என பங்காளி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் நிலவும் முறுகல்கள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன்போது பரந்துபட்ட கூட்டணி அமைக்கப்பட்டாலும் SJB தலைமையிலேயே அமைக்கப்பட வேண்டும் என்று சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply