ஊழல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கடும் தண்டனையை எதிர்கொள்வர். அனைத்து மக்கள் மீதும் சட்டம் சமமாக அமல்படுத்தப்படும். எவ்வளவு கோஷங்கள் எழுப்பினாலும், எடுத்த தீர்மானங்களை மீளப்பெறப் போவதில்லை. செப்டம்பர் மாதம் புதிய சட்டம் இயற்றப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து அரசு வழங்கிய வீடுகளும் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்படும். பொறுப்புணர்வை வலுப்படுத்துவதற்கும், நீதியை உறுதி செய்வதற்கும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எந்த தனிநபரும், எனது நிர்வாகத்தின் கீழ் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க மாட்டார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (26) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.