‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களில் 25 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்: மேற்கு வங்க முதல்வர் அழைப்பால் தொழில்முனைவோர் கலக்கம் | 25 lakh migrant workers in MSME companies

கோவை: தமிழகத்​தில் உள்ள சிறு, குறு மற்​றும் நடுத்தர (எம்​எஸ்​எம்இ) தொழில் நிறு​வனங்​களில் 25 லட்​சம் பிற மாநில தொழிலா​ளர்​கள் பணி​யாற்​றிவரும் நிலை​யில், மேற்கு வங்க முதல்​வரின் சலுகை அறி​விப்​பால் தொழில் துறை​யினர் கலக்​கமடைந்துள்ளனர்.

உற்​பத்தி மற்​றும் சேவைத் துறை​களில் தேசிய அளவில் சிறந்து விளங்​கும் தமிழகத்​தில், அடிப்​படைப் பணி​களுக்கு தொழிலா​ளர்​கள் பற்​றாக்​குறை அதி​கம் உள்​ளது. இதனால், ஒடி​சா, உத்தரபிரதேசம், பிஹார் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களை சேர்ந்த புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் இப்​பணி​களில் ஈடு​படுத்​தப்​பட்டு வரு​கின்​றனர்.

தொடக்​கத்​தில் கட்​டு​மானம், நூற்​பாலை, மருத்​து​வ​மனை, ஓட்​டல் போன்ற துறை​களில் மட்​டும் பிற மாநில தொழிலா​ளர்​கள் பணி​யாற்​றிய நிலை​யில், தற்​போது சரக்கு வாக​னம் ஓட்​டு​தல், தூய்​மைப் பணி, விவ​சாயப் பணி உள்​ளிட்ட பெரும்​பாலான துறைகளில் அதிக எண்​ணிக்​கை​யில் பணிபுரி​கின்​றனர்.

அண்​மை​யில், மேற்​கு​வங்க முதல்​வர் மம்தா பானர்​ஜி, வேலை ​வாய்ப்​புக்​காக பிற மாநிலங்​களுக்கு சென்​றுள்ள தொழிலா​ளர்​கள் மீண்​டும் ஊர் திரும்​பி​னால், ஊக்​கத்​தொகை​யாக ரூ.5,000 மற்​றும் வேலை​வாய்ப்​புக்​கான உதவி​கள் செய்​யப்​படும் என உறுதி அளித்​துள்​ளார்.

இந்த அறி​விப்​பு, புலம்​பெயர் தொழிலா​ளர்​களை நம்​பி​யுள்ள தமிழக தொழில் துறை​யினரை கலக்​கமடையச் செய்​துள்​ளது. இதுகுறித்து தமிழ்​நாடு அனைத்து தொழில்​முனை​வோர் சங்க மாநிலப் பொதுச் செய​லா​ளர் ஜெய​பால் கூறிய​தாவது: தமிழகத்​தில் 50 லட்​சம் எம்​எஸ்​எம்இ நிறு​வனங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன.

இவற்​றில் 25 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். தொடக்​கத்​தில் கட்​டு​மானத் தொழிலில் மட்​டுமே பலர் பணி​யாற்றி வந்த நிலை​யில், தற்​போது உற்​பத்தி மற்​றும் சேவைப் பிரிவு​களின் கீழ் உள்ள பெரும்​பாலான தொழில் நிறு​வனங்​களில் அவர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

அடிப்​படைப் பணி​களில் ஈடு​பட்​டுள்ள புலம்​பெயர் தொழிலா​ளர்​களுக்கு தொழிலைக் கற்​றுக்​கொடுத்​து, தங்​குமிடம் கொடுத்​து, ஊக்​கத்​தொகை உள்​ளிட்ட சலுகைகளு​டன் தமிழகத்​தில் வேலை​வாய்ப்பு வழங்​கப்​படு​கிறது. புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் இல்​லாத துறையே இல்லை என்ற நிலை உள்​ளது.

இத்​தகைய சூழ்​நிலை​யில், அண்​மை​யில் மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்​ஜி, புலம்​பெயர்ந்த தொழிலா​ளர்​கள் மீண்​டும் மேற்​கு​வங்க மாநிலத்​துக்கு திரும்​பி​னால் ஒவ்​வொரு​வருக்​கும் ரூ.5,000 ஊக்​கத்​தொகை​யுடன் வேலை​வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று அறி​வித்​துள்​ளார். இந்த அறி​விப்பு தொழில்​முனை​வோர் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தமிழகத்​தில் உள்ள புலம்​பெயர் தொழிலா​ளர்​களை தங்​கள் கட்​டுப்​பாட்​டில் வைத்​திருப்​பது வட மாநிலங்​களை சேர்ந்த ஒப்​பந்​த​தா​ரர்​கள்​தான். இவர்​களில் புலம்​பெயர் தொழிலா​ளர்​களுக்கு உதவும் வகை​யில் ஓட்​டல் உள்​ளிட்ட பல்​வேறு வணி​கத்​தி​லும் ஈடு​பட்டு வரு​கின்​றனர். ஒரு தொழிலா​ளிக்கு ரூ.600 தினசரி ஊதி​யம் நிர்​ண​யிக்​கப்​பட்​டால், அதில் ரூ.30 வரை ஒப்​பந்​த​தா​ரர்​கள் எடுத்​துக் கொள்​வார்​கள். தொழில் துறை​யினரிட​மும் கமிஷன், தொழிலா​ளர்​களிட​மும் கமிஷன் பெற்று வரு​கின்​றனர்.

தொழில் நிறுவன உரிமை​யாளர்​கள் கூறு​வதை​விட, தங்​களை பணிக்கு சேர்த்​து​விட்ட ஒப்​பந்​த​தா​ரர்​கள் கூறு​வதைத்​தான் புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் கேட்டு நடப்​பார்​கள். தமிழகத்​தில் உள்ள வடமாநில ஒப்​பந்​த​தா​ரர் ஒரு​வர் மாதம் ரூ.12 லட்​சம் கமிஷன் தொகையை பெற்று வரு​கிறார். பணத்தை வழங்கி தொழிலா​ளர்​களை அழைத்து வர வேண்​டும் என்று கூறி​னால், 500, 1,000 தொழிலா​ளர்​களை பணிக்கு அனுப்​பிவைக்​கும் திறன் கொண்​டுள்​ளார்.

இத்​தகைய ஒப்​பந்​த​தா​ரர்​கள் வேறு மாநிலத்​துக்கு சென்​று​விட்​டால் தமிழ்​நாட்​டில் பல்​வேறு துறை​கள் ஸ்தம்​பிக்​கும் அபா​யம் உள்ளது. எனவே, மேற்​கு​வங்க முதல்​வர் போன்​றவர்​கள் தொடர்ந்து சலுகை அறி​விப்​பு​களை வெளி​யிட்டு வந்​தா​லும், புலம்​பெயர் தொழிலா​ளர்​களை தக்​க​வைத்​துக்​கொள்ள தேவை​யான நடவடிக்​கைகளை தமிழக முதல்​வர் உடனடி​யாக மேற்​கொள்ள வேண்டும். அதுவே இப்​பிரச்​சினைக்கு தீர்​வாகும். இவ்​வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply