எரிபொருள் விலை உயர்வால் ஏப்ரலில் 1,000 விமான சேவைகள் ரத்து – SAS அறிவிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் காரணமாக எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், Scandinavian Airlines (SAS) நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் சுமார் 1,000 விமான சேவைகளை ரத்து செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்தால், விமான கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை உருவாகும் என்றும் SAS நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Anko van der Werff எச்சரித்துள்ளார்.

மேலும், ஒரே இலக்கிற்கு பல விமான சேவைகள் உள்ள பாதைகளில் முதலில் குறைப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு சேவை பாதிப்பை குறைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலை நீடித்தால், உலகளாவிய விமானப் போக்குவரத்து துறையில் கட்டண உயர்வுகள் மற்றும் சேவை குறைப்புகள் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நன்றி

Leave a Reply