ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கிய வலுவான செய்திக்கும், பாலஸ்தீனம் குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கையின் நிலையான ஆதரவிற்கும், இலங்கைக்கான பாலஸ்தீன தூதர் இஹாப் கலீல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பாலஸ்தீன தூதர் இஹாப் கலீல் மற்றும் வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோருக்கிடையில் இன்று (02) சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது . பாலஸ்தீனத்தின் தற்போதை நிலைமை குறித்து நாங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம் என பிரதியமைச்சுர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சமாதானத் திட்டம், பாலஸ்தீன மக்களின் கண்ணியம், உரிமைகளை நிலை நிறுத்தும் ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்விற்கான அவசரத் தேவை குறித்தும் எங்கள் கருத்துக்களை பரிமாற்றம் செய்தோம் எனவும் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.