ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு!

இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியன் பிரீமியர் லீக்கில் (‍IPL) இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (27) அறிவித்துள்ளார்.

அதேநேரம், உலகெங்கிலும் உள்ள ஏனைய லீக் போட்டிகளில் விளையாடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் உள்ளார்.

மேலும் அந்த அணியில் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற 38 வயதான அஸ்வின், 2025 சீசனுக்கு முன்பு நடந்த மெகா ஏலத்தில் 9.75 கோடி ரூபாவுக்காக CSK அணிக்கு வாங்கப்பட்டார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் ஐந்து அணிகளுக்காக அஸ்வின் விளையாடியுள்ளார்.

மேலும், பஞ்சாப் அணியின் தலைவராகவும் இருந்தார்.

தனது IPL வாழ்க்கையில், சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளை அவர் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

போட்டியின் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய ஐந்தாவது வீரராக அஸ்வின் ஓய்வு பெறுகிறார்.

நன்றி

Leave a Reply