ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கை அணி-இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!











ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கை அணி-இலங்கை கிரிக்கெட் நிறுவனம்! – Athavan News
































இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடர் மார்ச் 13 ஆம் திகதி சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ளதுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் மார்ச் 15 மற்றும் 17 ஆம் திகதிகளில் சார்ஜாவில் நடைபெறவுள்ளது

மேலும் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் மாதம் 20 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமாகவுள்ளதுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் அதே மாதம் 22 மற்றும் 25 ஆம் திகதிகளில் டுபாயில் நடைபெறுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply