ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்!

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 2026 ஐசிசி டி20 உலகக் கிண்ணத்தின் 28 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தியது.

இது தொடரில் ஆப்கானிஸ்தான் பெற்றுக் கொண்ட முதல் வெற்றியாகும்.

இன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியானது 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களை எடுத்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் சோஹைப் கான் 48 பந்துகளில் 68 ஓட்டங்களையும், அலிஷான் ஷரபு 31 பந்துகளில் 40 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் சார்பில் அஸ்மதுல்லா உமர்சாய் 4 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் அதிகபடியாக வீழ்த்தினர்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்கள‍ை பெற்றது.

ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபடியாக இப்ராஹிம் சத்ரான் 41 பந்துகளில் 53 ஓட்டங்களையும், அஸ்மதுல்லா உமர்சாய் 21 பந்துகளில் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக அஸ்மத்துல்லா உமர்சாய் தெரிவானார்.

Image

நன்றி

Leave a Reply