காங்கோ மக்களாட்சிக் குடியரசில் பரவி வரும் மாரண எபோலா வைரஸ் தொற்றுக்கு ஆளான முதல் ஐரோப்பிய நோயாளி பிரான்சில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காங்கோ மக்களாட்சிக் குடியரசில் பரவி வரும் மாரண எபோலா வைரஸ் தொற்றுக்கு ஆளான முதல் ஐரோப்பிய நோயாளி பிரான்சில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் இன்று (24) செய்தி வெளியிட்டுள்ளன.
காங்கோ மக்களாட்சிக் குடியரசில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு மருத்துவருக்கே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று உறுதிப்படுத்தப்பட்ட உடனேயே அவர் ஒரு சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை தற்போது திருப்திகரமாக உள்ளதாகவும் பிரான்ஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காங்கோ மக்களாட்சிக் குடியரசில் இதுவரை எபோலா வைரஸ் தொற்றால் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாகவும் காங்கோவில் பணியாற்றிய ஒரு அமெரிக்க மருத்துவருக்கு எபோலா தொற்று ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், காங்கோவின் அண்டை நாடான உகாண்டாவில் 20 எபோலா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
