ஒரு டிகிரி போதும் மகாராஷ்டிரா வங்கியில் வேலை – 500 காலியிடங்கள் ரூ.64,820/- சம்பளம்! Bank of Maharashtra Generalist Officer Recruitment 2025

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள் மகாராஷ்டிரா வங்கி
Bank of Maharashtra
காலியிடங்கள் 500
பணி பொது அதிகாரி (Generalist Officer)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 30.08.2025
பணியிடம் தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://bankofmaharashtra.in/

மகாராஷ்டிரா வங்கி (Bank of Maharashtra), 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா வங்கி பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • பொது அதிகாரி (Generalist Officer) – 500 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மகாராஷ்டிரா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 60% மதிப்பெண்களுடனும், SC, ST, OBC மற்றும் மாற்றுத்திறனாளிகள் 55% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது, Chartered Accountant தகுதி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். CMA / CFA / ICWA தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மகாராஷ்டிரா வங்கியில் உள்ள பொது அதிகாரி (Generalist Officer) பணிக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும். மத்திய அரசின் விதிமுறைகளின்படி, SC, ST, OBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

வயது தளர்வு விவரங்கள்:

வகை வயது தளர்வு
SC / ST 5 ஆண்டுகள்
OBC 3 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS) 10 ஆண்டுகள்
PwBD (SC/ ST) 15 ஆண்டுகள்
PwBD (OBC) 13 ஆண்டுகள்

மகாராஷ்டிரா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத அடிப்படை சம்பளமாக ரூ.64,820 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது அதிகாரி பதவிக்கு ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும்.

மகாராஷ்டிரா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்குத் தகுதி பெறுவார்கள். இரண்டு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக, பொதுப் பிரிவினர் 50% மற்றும் இதர பிரிவினர் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

  • ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.118/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1180/-
  • கட்டண முறை: ஆன்லைன்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here

மகாராஷ்டிரா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 13.08.2025 முதல் 30.08.2025 தேதிக்குள் https://bankofmaharashtra.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply