ஒருநாள் அணியின் தலைவராக ரோஹித்துக்கு பதிலாக ஷுப்மன் கில்?

ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஷுப்மன் கில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் அகமதாபாத்தில் இன்று (04) நடைபெற்ற தேர்வுக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த முடிவின்படி, அக்டோபர் 19 ஆம் திகதி பெர்த்தில் தொடங்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கில் இந்தியாவை வழிநடத்துவார்.

அதேநேரம், கடந்த பெப்ரவரி மாத தொடக்கத்தில் இந்தியாவுக்காக சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்த தலைவர் ரோஹித் சர்மா மற்றும்  முன்னாள் அணித் தலைவர் விராட் கோலியும் வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதன் மூலம் 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்குப் பின்னர், முதல் முறையாக ரோஹித் மற்றும் கோலி இருவரும் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், ஒக்டோபர் 19 முதல் தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியாவுடன் மோதும்.

ஒக்டோபர் 19 முதல் 25 வரை அவுஸ்திரேலியாவில் இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும். 

அதன் பின்னர், ஒக்டோபர் 29 முதல் நவம்பர் 8 வரை ஆசியக் கிண்ண வெற்றியாளர்கள், ஐந்து டி20 போட்டிகளிலும் அவுஸ்திரேலியாவுடன் விளையாடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply