குறித்த நபர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சியம்பலாபே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2022.03.24 அன்று கடவத்தை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது டி56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டு இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்தக் குற்றச் செயல் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட, குறித்த சந்தேகநபர் மஹர நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின் பிணையில் விடுதலையான அவர், நீதிமன்ற உத்தரவுகளை மீறி வெளிநாடு தப்பிச் சென்றிருந்தார்.
இதன் காரணமாக அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடவத்தை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

