கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்று (18) அதிகாலை 2.30 மணிக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், நாளை (19) அதிகாலை 2.30 மணி வரை 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே நேரத்தில், கண்டி, குருநாகல் மற்றும் நுவரெலியா மாவட்ட மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, மாத்தளை, குருநாகல் மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

