கனடாவுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த மூவர் கைது!

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் போலி ஆவணங்களைத் தயாரித்து வைத்திருந்ததற்காக ஒரு ஆணும் இரண்டு பெண்களும் நேற்று (25) பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு, அவர்களிடம் இருந்து போலி விசா ஸ்டிக்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் என்றும், இரண்டு பெண் சந்தேக நபர்களும் 26 மற்றும் 68 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் கோனகனார மற்றும் பொரளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விசாரணைகளில் ஒரு சந்தேக நபர் மாத்திரம் கனடாவுக்கு அனுப்புவதாக உறுதியளித்து ரூ.3,831,000/= மற்றும் ரூ.3,436,000/= போன்ற பெரிய அளவிலான பணத்தை மோசடி செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர்கள் இதுபோன்ற வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply