காசா பகுதியின் தெற்கில் அமைந்துள்ள நாசர் வைத்தயசாலையை திங்களன்று (25) இஸ்ரேல் படை தாக்கியது.
இந்த தாக்குதலில் ரொய்ட்டர்ஸ், அசோசியேட்டட் பிரஸ், அல் ஜசீரா மற்றும் ஏனைய செய்திச் சேவைகளைச் சேர்ந்த ஐந்து ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர்.
அதேநேரம் தாக்குதலில், நான்கு சுகாதார ஊழியர்களும் மரணித்ததாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறினார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த சம்பவத்தை “துயரமான விபத்து” என்று அழைத்தார்.
மேலும், தாக்குதல் தொடர்பில் இராணுவ அதிகாரிகள் “முழுமையான விசாரணையை நடத்தி வருகின்றனர்” என்றார்.
அண்மைய இறப்புகளுடன், 2023 ஒக்டோபரில் காசாவில் போர் தொடங்கியதிலிருந்து உயிரிழந்த ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையை சுமார் 200 ஆக உயர்ந்துள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து சர்வதேச ஊடகவியலாளர்கள் காசா பகுதிக்குள் சுதந்திரமாக நுழைவதை இஸ்ரேல் தடை செய்துள்ளது.
சில ஊடகவியலாளர்கள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் (IDF) கட்டுப்படுத்தப்பட்ட அணுகலின் கீழ் காசாவிற்குள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் சர்வதேச ஊடகங்கள் காசாவில் தங்கள் செய்தி சேகரிப்புக்கு உள்ளூர் செய்தியாளர்களையே நம்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.