காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து அவுஸ்திரேலியாவில் போராட்டம்!

காசாவில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று (03) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சிட்னி துறைமுகப் பாலத்தின் வழியாக, முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன நடவடிக்கைக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட “மனிதநேயத்திற்கான அணிவகுப்பு” என்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியை தடுத்து நிறுத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதனை நிறுத்த காவல்துறை மேற்கொண்ட முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே, நாடாளுமன்ற உறுப்பினர் எட் ஹுசிக் மற்றும் நியூ சவுத் வேல்ஸின் முன்னாள் முதல்வர் பாப் கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க அவுஸ்திரேலியா மீது அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தத்தின் மத்தியில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply