காயமடைந்த கழுகின் 15,000 கி.மீ தூரப் பயணம்! – Athavan News

இந்தியாவின் மணிப்பூரில் இருந்து ஆப்பாரிக்கா நாடான சோமாலியாவுக்கு சுமார் 6,000 கீலோ மீட்டர் தூரம் பயணம் செய்த ஃபால்கன் அமுர் பறவயை கொண்டாடும் நிலையில், மற்றுமோர் பறவை மற்றொரு கடினமாக இடம்பெயர்வு சாதனையை பதிவு செய்துள்ளது.

2025 ஜனவரி மாதத்தில் இந்தியாவின் விதிஷா காடுகளில் இருந்து காயமடைந்த நிலையில் யூரேசிய கிரிஃபோன் ( Eurasian Griffon) இனக் கழுகு மீட்கப்பட்டது. 

மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் அந்தப் பறவை மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது.

அன்றிலிருந்து அந்தப் பறவை ஒரு அசாதாரண பயணத்தைத் தொடங்கியது.

இந்திய வனத்துறை அதிகாரிகள் அதன் உடலில் பொருத்தப்பட்டிருந்த ரேடியோ காலரின் உதவியுடன் எல்லைகளைத் தாண்டி அதன் இயக்கத்தை பதிவு செய்தனர்.

அதில் அந்தக் கழுகு, 15,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாகப் பயணித்து, பல நாடுகளைக் கடந்து கஜகஸ்தானுக்குச் சென்று பின்னர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Image

இந்த குறிப்பிடத்தக்க இடம்பெயர்வை இந்திய வன சேவை அதிகாரி ஹிமான்ஷு தியாகி எக்ஸில் எடுத்துரைத்தார்.

அதில் அவர், இந்த கம்பீரமான பறவையின் மீள்தன்மையை திறமையை வெளிப்படுத்தினார். 

பெரிய இறக்கைகள் மற்றும் நீண்ட தூரம் பறக்கும் திறனுக்கு பெயர் பெற்ற யூரேசிய கிரிஃபோன், சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு முக்கிய இனமாகும்.

இது பெரும்பாலும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் குறிகாட்டியாகக் கருதப்படுகிறது.

இந்தப் பயணம் உணவு, பொருத்தமான வாழ்விடத்தைத் தேடி, மிகப்பெரிய தூரத்தைக் கடக்கக்கூடிய கிரிஃபோன் கழுகுகளின் பரந்த இயக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இவ்வளவு நீண்ட நாடுகடந்த பயணத்திற்குப் பிறகு, இந்தப் பறவை இந்திய காடுகளுக்குத் திரும்புவது, இந்தப் புலம்பெயர்ந்த இனங்கள் பல எல்லைகளைக் கடப்பதால், பறவைகளைப் பாதுகாப்பதில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது – என்றார்.

இவை ஐரோப்பா, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் சில பகுதிகளில் பரவலாகக் காணப்படும் பெரிய பழைய உலக கழுகு இனங்களில் ஒன்றாகும்.

அவற்றின் மிகப்பெரிய இறக்கைகள் (2.8 மீட்டர் வரை) மற்றும் நீண்ட தூரம் பறக்கும் திறனுக்காக அறியப்பட்ட இவை, ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணிக்கும் நிபுணத்துவம் பெற்றது.

Image

நன்றி

Leave a Reply