காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த தங்கம் விலை: ஒரு பவுன் ரூ.87,200-க்கு விற்பனை | Today gold rate increase in the evening

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (அக்.3) காலையில் பவுனுக்கு ரூ.880 குறைந்த நிலையில், இன்று மாலை பவுனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.79 அளவில் கடும் வீழ்ச்சி கண்டிருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணமாக உள்ளது.

கடந்த மாதம் 26-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அக்.1-ம் தேதி அன்று தங்கம் விலை ஒரு பவுன் ரூ.87,600 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இந்நிலையில், இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,840-க்கு விற்பனை ஆனது. அதேபோல, பவுனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.86,720-க்கு விற்பனை ஆனது. இதேபோல 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.960 குறைந்து ஒரு பவுன் ரூ.94,608-க்கு விற்பனை ஆனது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் மாலை நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.87,200-க்கு விற்பனையாகிறது. காலையில் பவுனுக்கு ரூ 880 குறைந்த நிலையில், மாலையில் ரூ.480 அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply