68
யாழ்ப்பாணத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரை மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு காவல்துறை உத்தியோகஸ்தருக்கு படுகாயமேற்
அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி தலைமறைவாகியுள்ள நிலையில் , சாரதியை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கொடிகாமம், கெற்பேலி பகுதியில் , சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக இன்றைய தினம் சனிக்கிழமை காலை கொடிகாமம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் விரைந்துள்
காவல்துறையினரை கண்டதும், உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து காவல்துறையினர் இருவர் மீதும் மோதி விட்டு தப்பி சென்றுள்ளார். உழவு இயந்திரம் மோதியதில் கொடிகாமம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை சார்ஜெண்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற மற்றைய காவல்துறை உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த காவல்துறை அதிகாரியின் சடலம் சாவகச்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரம் கிளாலி பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்
#Kodikamam #Kerpely #Kilali #Police Officer Murder #Sgt. Hettiarachchi Alfred #Sand Smuggling)
#Tractor Recovered #Jaffna News
